வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இலங்கையின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

Executive Intelligence Dispatch
வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கட்டமைப்பு மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒக்டோபர் 25ஆம் திகதியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், ஒக்டோபர் 26ஆம் திகதி காலை மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் சூறாவளியாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தக் கட்டமைப்பு இலங்கைக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படவில்லை. எனினும், இதனுடன் தொடர்புடைய காற்றோட்டம் நாடு முழுவதும் பரவுவதால், அடுத்த சில நாட்களில் தீவின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல், சபரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Key Facts & Findings
- —வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இலங்கையின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!
- —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
- —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
Key development for parliamentary governance, institutional integrity, and statutory policy in Sri Lanka.
Further official announcements, regulatory updates, or judicial proceedings are tracked via Hiru News (ஹிரு).
Newsroom Coverage Spectrum
Ground News StyleVerified Across 2 Independent Newsrooms across print, broadcast, and international agencies.
Ad Space Reserved (LEADERBOARD)
Partner Inquiries: advertising@lankadispatch.comHiru News (ஹிரு)
Support authentic news reporting by reading the complete investigation directly on the publisher’s platform.
Cross-Publisher Reporting & Perspectives (1)
வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இலங்கையின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!
The Wire Discussion
0Civil, fact-grounded reader perspectives and analysis
Lanka Dispatch enforces strict community standards. Defamation, hate speech, and spam are automatically filtered.
Ad Space Reserved (MULTIPLEX)
Partner Inquiries: advertising@lankadispatch.comReporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk