புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் GSP+ சலுகைக்கு ஆபத்து! – ஆடை ஏற்றுமதியாளர்கள் எச்சரிக்கை

Executive Intelligence Dispatch
இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTA), ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகையைப் பாதிக்கக்கூடும் என கூட்டு ஆடைச் சங்கங்களின் கூட்டமைப்பு (JAAF) எச்சரித்துள்ளது.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில், பரந்த பயங்கரவாத வரைவிலக்கணங்கள், நீதித்துறை மேற்பார்வையின்றி இராணுவத்துக்கு காவல் அதிகாரங்களை வழங்குதல் மற்றும் நீண்டகாலத் தடுப்புக்காவல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய ஏற்பாடுகள் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கையின் மொத்தப் பொருள் ஏற்றுமதியில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் ஆடைத் தொழில்துறை, ஆண்டுதோறும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுகிறது. இந்நிலையில், இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய சந்தையாக விளங்குகிறது.2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதி, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக JAAF தெரிவித்துள்ளது.GSP+ வரிச்சலுகை மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புபட்டுள்ளது. தற்போதைய சலுகைக் காலம் 2027ஆம் ஆண்டில் முடிவடைவதால், அடுத்த காலப்பகுதிக்கான சலுகையைப் பெற இலங்கை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.புதிய சட்டமூலம் தற்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்பட்டால், GSP+ சலுகையைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளதாக JAAF எச்சரித்துள்ளது.எனவே, தடுப்புக்காவல் உத்தரவுகளுக்கு முன்னர் நீதித்துறை ஆய்வு, அமைப்புகளைத் தடை செய்வதில் நீதிமன்றத் தலையீடு மற்றும் கைது நடவடிக்கைகளை சிவில் காவல்துறைக்கு மட்டுப்படுத்துதல் உள்ளிட்ட திருத்தங்களைச் சட்டமூலத்தில் மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரே திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என வலியுறுத்தியுள்ள JAAF, இதன் மூலம் இலட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் பொருளாதார எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
Key Facts & Findings
- —புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் GSP+ சலுகைக்கு ஆபத்து! – ஆடை ஏற்றுமதியாளர்கள் எச்சரிக்கை
- —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
- —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
Key development for parliamentary governance, institutional integrity, and statutory policy in Sri Lanka.
Further official announcements, regulatory updates, or judicial proceedings are tracked via Hiru News (ஹிரு).
Newsroom Coverage Spectrum
Ground News StyleVerified Across 2 Independent Newsrooms across print, broadcast, and international agencies.
Ad Space Reserved (LEADERBOARD)
Partner Inquiries: advertising@lankadispatch.comHiru News (ஹிரு)
Support authentic news reporting by reading the complete investigation directly on the publisher’s platform.
Cross-Publisher Reporting & Perspectives (1)
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் GSP+ சலுகைக்கு ஆபத்து! – ஆடை ஏற்றுமதியாளர்கள் எச்சரிக்கை
The Wire Discussion
0Civil, fact-grounded reader perspectives and analysis
Lanka Dispatch enforces strict community standards. Defamation, hate speech, and spam are automatically filtered.
Ad Space Reserved (MULTIPLEX)
Partner Inquiries: advertising@lankadispatch.comReporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk