ஈழத்தமிழர் அரசியலுக்கு முன்னால் விரியும் வரலாற்றுச் சவால்: 2027 ஜெனீவா முற்றுப்புள்ளியும், இந்தோ - பசுபிக் சதுரங்கமும்

நிர்வாக புலனாய்வு சுருக்கம்
* மேற்குலக நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே புவிசார் அரசியல் போட்டியின் தீவிரம்!!* சர்வதேசக் கண்காணிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் இலங்கை.* ஓய்வு நிலைக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள்.2009 மே மாதத்திற்குப் பின்னரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 60/1 தீர்மானத்தின் பிரகாரம், இலங்கைப் பொறுப்புக்கூறல் திட்டத்தின் ஒஸ்லாப் (OSLaP) எனப்படும் ஐ.நா. சாட்சியப் பொறிமுறையின் கால அவகாசம், வரவுள்ள 2027 ஆம் ஆண்டு செப்ரெம்பர் - ஒக்ரோபர் மாதங்களுடன் முடிவடையவுள்ளது.இந்த நிலையில், தமிழர் விவகாரம் வரலாற்றின் மிகப் பலவீனமான ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது எனலாம்.சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை என்ற ஈழத்தமிழர்களின் தசாப்த காலக் கோரிக்கை, ஐ.நா மனித உரிமை அரங்கில் மெல்ல மெல்ல நீர்த்துப்போகச் செய்யப்பட்டு, வெறுமனே உள்ளக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்குள் முடக்கப்படும் சூழல் கண்முன்னே தெரிகிறது.2025 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே 'வெளிநாட்டு நீதிபதிகள்' என்ற கோரிக்கை கைவிடப்பட்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டமையானது, சர்வதேச சமூகத்தின் மனநிலை மாற்றத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.அடுத்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் உள்ளக விசாரணைகள், புதைகுழி அகழ்வுகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் ஆகியவற்றில் ஓரளவு முன்னேற்றத்தைக் காண்பித்துவிட்டால், இலங்கை சர்வதேசக் கண்காணிப்பிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ளும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.இலங்கையில் ஆட்சிகள் மாறலாம், தலைவர்களின் நிறங்கள் மாறலாம்; ஆனால் 'இலங்கை அரசு' (Sri Lankan State) என்ற கட்டமைப்பும் அதன் இராஜதந்திர இயந்திரமும், மாறாது. இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை குறைப்பதில் எள்ளளவும் பிசகாமல் ஒரே நேர்க்கோட்டில் நிதானமாகப் சிங்கள அரசியல் பயணித்து வருகிறது.இன்றைய அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் கூட, தனது இடதுசாரிச் சித்தாந்தங்களுக்கு அப்பால், இலங்கை அரசின் பாரம்பரிய இராஜதந்திர வியூகங்களை மிகத் திறமையாகக் கையாளுகிறது.வெளிப்புற சாட்சியப் பொறிமுறைகளை நிராகரிக்கும் அதேவேளை, சர்வதேச சமூகத்துடன் மோதல் போக்கைக் கைவிட்டு, நல்லெண்ண சமிக்ஞைகள் மூலம் மேற்குலக நாடுகளைத் திருப்திப்படுத்தும் நகர்வை அது முன்னெடுக்கிறது.இதற்குப் பின்னால், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்களை கொழும்பு நிர்வாகம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இராஜதந்திரச் சாதுரியம் ஒளிந்திருக்கிறது. இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையைத் தமது பிடியில் வைத்திருக்கத் துடிக்கும் மேற்குலக நாடுகளும், சீனாவும், இலங்கையின் மனித உரிமை மீறல்களை விடவும் தமது பிராந்தியப் பாதுகாப்பு நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்பதைக் கொழும்பு நன்கு உணர்ந்துள்ளது.அதேநேரம், பிராந்திய வல்லரசான இந்தியாவும் 'இலங்கை அரசு' என்ற கட்டமைப்பைத் தனது புவிசார் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்றவாறு மிக நுணுக்கமாகக் கையாண்டு வருகிறது.13 ஆவது திருத்தச் சட்டத்தையோ அல்லது ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வையோ அழுத்தமாக வலியுறுத்துவதை விடவும், இலங்கையின் பொருளாதார மற்றும் மூலோபாயத் துறைகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதிலேயே புதுடில்லி குறியாக உள்ளது.இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்புடன் இணக்கமான போக்கையே இந்தியா பேணுகிறது.இதனால், ஈழத்தமிழர் விவகாரம் என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் பேரம்பேசல்களில் ஒரு கருவியாக மட்டுமே சுருங்கிப்போயுள்ள யதார்த்தத்தைத் தமிழ் அரசியல் தலைமைகள் இன்னும் முழுமையாக உள்வாங்கவில்லையா என்பது இங்கு வேடிக்கை.இத்தகைய இறுக்கமான புவிசார் அரசியல் சூழலில், 2009 மே மாதத்திற்குப் பின்னரான ஈழத்தமிழர் அரசியலின் போக்கு மிதவாதப் போக்காக அமைந்தாலும் அது கூட ஏமாற்றத்தையே தருகிறது.சிங்களத் தலைவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று, 'இலங்கை அரசு' என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து தமது இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்பது போல, 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் ஒருமித்த குரலோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல் போய்விட்டது.உள்ளூர் தேர்தல் அரசியலிலும், பதவிப் போட்டிகளிலும், தனிநபர் முரண்பாடுகளிலும் மூழ்கிக்கிடக்கும் தமிழ்த் தலைமைகள், சர்வதேச அரங்கில் தமிழர் தேசத்தின் கூட்டுக் குரலை ஒலிக்கத் தவறிவிட்டன.புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஒருங்கிணைப்பற்ற நிலையில், பழைய கோசங்களையே மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டிருக்கின்றனவே தவிர, மாறிவரும் சர்வதேச இராஜதந்திரச் சூழலுக்கு ஏற்பத் தமது வியூகங்களை மாற்றிக்கொள்ளவில்லை.ஆகவே, 2027 ஒக்ரோபர் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஈழத்தமிழர்கள் தமது அரசியல் கோரிக்கை வடிவத்தையும் இராஜதந்திர அணுகுமுறையையும் உடனடியாக மறுசீரமைக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளனர்.ஜெனீவா மனித உரிமைகள் சபையின் அரசியல் தீர்மானங்களை மட்டுமே நம்பியிருக்காமல், இதுவரை OSLaP பொறிமுறை சேகரித்து வைத்துள்ள வலுவான சாட்சியங்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட நாடுகளின் நீதிமன்றங்களில் 'சர்வதேச நியாயாதிக்க' (Universal Jurisdiction) சட்டங்களின் கீழ் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதேவேளை, தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ்த் தரப்புகள், தமது குறுகிய கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு பொதுவான இராஜதந்திரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.இதன் ஊடாக, இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பாதுகாப்பு அக்கறைகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வே இப்பிராந்தியத்தின் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவ வேண்டும்.காலத்தின் சுவரில் எழுதப்பட்டிருக்கும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, தமிழர்கள் ஒற்றைக் குரலாக எழாவிட்டால், 2027 ஆம் ஆண்டு என்பது ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிக் கோரிக்கைக்கு ஒரு கசப்பான முற்றுப்புள்ளியாக மாறிவிடும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே புவிசார் அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது. இப்போட்டியில், இலங்கையின் அமைவிடமும் குறிப்பாகத் திருகோணமலை இயற்கைத் துறைமுகமும் மிக முக்கிய கேந்திரப் புள்ளிகளாக மாறியுள்ளன.இந்து சமுத்திரத்தின் கடல் வழிப் பாதைகளைக் கட்டுப்படுத்துவதிலும், பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் இலங்கையின் புவியியல் அமைவிடம் தவிர்க்க முடியாதது. இதன் காரணமாக, வல்லரசுகள் கொழும்பு அரசாங்கத்துடன் மோதல் போக்கைக் கையாள்வதைத் தவிர்த்து, அதனைத் தமது செல்வாக்கு மண்டலத்திற்குள் தக்கவைத்துக் கொள்வதிலேயே தீவிரம் காட்டுகின்றன.இந்தப் புவிசார் சதுரங்கத்தில், சீனாவின் 'கடற் பட்டுப்பாதை' (Maritime Silk Road) திட்டத்திற்கு எதிராக அமெரிக்காவும் அதன் 'குவாட்' (Quad) கூட்டணி நாடுகளும் இலங்கையைத் தம்வசப்படுத்த முனையும் போது, மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றப் பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்கள் வெறும் இராஜதந்திர அழுத்தக் கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.மாறாக, ஈழத்தமிழர்களின் இறைமை சார்ந்த அரசியல் தீர்வுக்கான அடிப்படைகளாக அவை பார்க்கப்படுவதில்லை. திருகோணமலை உள்ளிட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள கட்சித் தலைவர்கள், வல்லரசுகளின் பாதுகாப்பு அச்சங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அப் பிரதேசத்தின் நிலப்பரப்பு மற்றும் பொருளாதார வளங்கள் மீதான தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகின்றனர். ஆகவே, இந்தப் புவிசார் அரசியல் யதார்த்தத்தைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, வல்லரசுகளின் பாதுகாப்பு நலன்களுக்கும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் இடையிலான இராஜதந்திரச் சமநிலையைக் கண்டறிந்து, ஒற்றைக் குரலாகத் தமது வியூகங்களை வகுக்கத் தவறினால், 2027 ஆம் ஆண்டு என்பது ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஒரு கசப்பான முற்றுப்புள்ளியாக மாறிவிடும் என்பது வெகு தொலைவில் இல்லை என்பது பட்டவர்த்தனம்.
முக்கிய உண்மைகள் සහ சான்றுகள்
- —ஈழத்தமிழர் அரசியலுக்கு முன்னால் விரியும் வரலாற்றுச் சவால்: 2027 ஜெனீவா முற்றுப்புள்ளியும், இந்தோ - பசுபிக் சதுரங்கமும்
- —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
- —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
தேசிய விளையாட்டுத்துறை முன்னேற்றம் மற்றும் போட்டி முடிவுகள் தொடர்பான முக்கிய செய்தி.
Hiru News (ஹிரு) செய்திப்பிரிவு மற்றும் தொடர்புடைய துறைகளின் அடுத்தகட்ட முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
செய்தியறை கவரேஜ் ஸ்பெக்ட்ரம்
Ground News Styleசரிபார்க்கப்பட்டவை: 2 சுயாதீன செய்தியறைகள் across print, broadcast, and international agencies.
Hiru News (ஹிரு)
வெளியீட்டாளரின் தளத்தில் முழுமையான செய்தியை வாசித்து உண்மை ஊடகவியலுக்கு ஆதரவளியுங்கள்.
Cross-Publisher Reporting & Perspectives (1)
ஈழத்தமிழர் அரசியலுக்கு முன்னால் விரியும் வரலாற்றுச் சவால்: 2027 ஜெனீவா முற்றுப்புள்ளியும், இந்தோ - பசுபிக் சதுரங்கமும்
வாசகர் கருத்துக்களம்
0நாகரீகமான, உண்மையின் அடிப்படையிலான வாசகர் பார்வை
அவதூறு மற்றும் தவறான தகவல்கள் தானாகவே வடிகட்டப்படும்.
Reporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk