திங்கள், 2 நவம்பர், 2026
நேரலை·Just now
Edition:

LANKADISPATCH

இலங்கையின் சுதந்திரமான செய்தித் தொகுப்பு

🇱🇰 Sri Lankapolitics/Hiru News (ஹிரு)•3 min read

குக் தீவுகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண் – நாடு திரும்ப முடியாமல் தவிப்பு!

அசல் செய்தியாளர்: Hiru News (ஹிரு)
திங்கள், 2 நவம்பர், 2026 அன்று 02:21
0138
முக்கிய தலைப்புகள்:#சுற்றுலா & விமானம்
குக் தீவுகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண் – நாடு திரும்ப முடியாமல் தவிப்பு!
Verified Wire Dispatch PhotoHiru News (ஹிரு)
Photo credit: Hiru News (ஹிரு) editorial wire

நிர்வாக புலனாய்வு சுருக்கம்

Gemini 2.0 Flash மூலம் தொகுக்கப்பட்ட சுயாதீன பகுப்பாய்வு
முக்கிய நிகழ்வு மற்றும் பின்னணி

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவுக் கூட்டமான குக் தீவுகளில், இலங்கையைச் சேர்ந்த 50 வயதுடைய ருச்சிரா ரணசிங்கே என்ற பெண் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கித் தவித்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த பெண் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறி, அங்கு நிரந்தரமாகத் தங்கும் எதிர்பார்ப்புடன் நியூசிலாந்துக்குச் சென்றுள்ளார்.அங்கு அரசியல் தஞ்சம் கோரிய அவர், பின்னர் திறந்த வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுள்ளார்.எனினும், வேலைவாய்ப்பு விசாவைப் பெறுவதற்காக வெளிநாட்டிலிருந்து மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என குடிவரவு ஆலோசகர் ஒருவர் வழங்கிய தவறான ஆலோசனையின் அடிப்படையில் அவர் குக் தீவுகளுக்குச் சென்றுள்ளார்.இதன்போது, நியூசிலாந்தை விட்டு வெளியேறியதால் அவரது ஏற்கனவே நடைமுறையிலிருந்த விசாவின் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன.இதன் காரணமாக அவர் புதிதாகச் சமர்ப்பித்த விசா விண்ணப்பத்தையும் நியூசிலாந்து அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.மேலும், இலங்கைக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ பயணிப்பதற்கான இடைநிலைப் பயண விசாவை வழங்க நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் மறுத்துள்ளன.மாற்றுப் பயணப் பாதைகளான ஹவாய் அல்லது தஹித்தி ஊடாகப் பயணிப்பதற்கும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்குவதற்காக அவர் நியூசிலாந்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அவரது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.இதனால், தனது ஒரே மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்கும், தாயாரைச் சந்திப்பதற்கும் மிகுந்த ஆவலுடன் இருந்தபோதிலும், கடவுச்சீட்டு மற்றும் இடைநிலைப் பயண விசா இல்லாத காரணத்தால் அவரால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது குக் தீவுகளில் உள்ள விருந்தகம் ஒன்றின் பணியாளர் தங்குமிடத்தில் இலவசமாகத் தங்கியுள்ள அவர், அப்பகுதி மக்களின் உதவியுடனும் தனக்குக் கிடைத்த தையல் இயந்திரத்தின் மூலமாகவும் சிறிய வருமானத்தை ஈட்டி வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.இந்தநிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் நியூசிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயமும் வெளிவிவகார அமைச்சும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழங்கப்பட்ட தவறான குடிவரவு ஆலோசனையால் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள குறித்த பெண்ணின் மனநலமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

முக்கிய உண்மைகள் සහ சான்றுகள்

  • —குக் தீவுகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண் – நாடு திரும்ப முடியாமல் தவிப்பு!
  • —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
  • —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
இது ஏன் முக்கியமானது?

பாராளுமன்ற ஆட்சி, நிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் கொள்கை நடைமுறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்து கவனிக்க வேண்டியவை

Hiru News (ஹிரு) செய்திப்பிரிவு மற்றும் தொடர்புடைய துறைகளின் அடுத்தகட்ட முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

செய்திச் சுருக்கத்தைப் பகிரவும்Lanka Dispatch Wire

செய்தியறை கவரேஜ் ஸ்பெக்ட்ரம்

Ground News Style

சரிபார்க்கப்பட்டவை: 2 சுயாதீன செய்தியறைகள் across print, broadcast, and international agencies.

Standard Corroboration
ஊடக பன்முகத்தன்மை குறியீடு2 Outlets Tracking
National Broadcasters
1
Independent Print
0
Wires & Financial
0
அசல் செய்தி

Hiru News (ஹிரு)

வெளியீட்டாளரின் தளத்தில் முழுமையான செய்தியை வாசித்து உண்மை ஊடகவியலுக்கு ஆதரவளியுங்கள்.

முழுமையான செய்தியை வாசிக்க
✓இலங்கை அறிவுசார் சொத்துச் சட்டம் பிரிவு 12 இன் கீழ் தொகுக்கப்பட்டதுhirunews.lk

Cross-Publisher Reporting & Perspectives (1)

Hiru News (ஹிரு)Live Dispatch

குக் தீவுகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண் – நாடு திரும்ப முடியாமல் தவிப்பு!

வாசகர் கருத்துக்களம்

0

நாகரீகமான, உண்மையின் அடிப்படையிலான வாசகர் பார்வை

அவதூறு மற்றும் தவறான தகவல்கள் தானாகவே வடிகட்டப்படும்.

0 / 500 charactersTrilingual civil moderation active

Reporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk