TIN இலக்க கட்டாயமாக்கல் 2027 ஏப்ரல் வரை ஒத்திவைப்பு

විධායක බුද්ධි තොරතුරු වාර්තාව
குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும் நடைமுறை, 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 செப்டம்பர் 22 திகதியிட்ட SEC/PN/IT/2026/05 இலக்கச் சுற்றறிக்கைக்கு அமைவாக, நவம்பர் 01 முதல் குறிப்பிட்ட எட்டு (08) வகையான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்கள் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், பொதுமக்கள் மற்றும் தனிநபர்களிடையே TIN சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகளவிலான கோரிக்கை காணப்படுவதைக் கருத்திற்கொண்டு, நிதி அமைச்சின் அனுமதியுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீடிக்கப்பட்ட காலப்பகுதியில், ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளவர்கள் தமது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று மற்றும் வசதியான முறைகளைத் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. அத்துடன், இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத தனிநபர்கள் இணையவழி மின்னணுச் சேவைகள் (e-Services) தளத்தைப் பயன்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் ஊக்குவிக்கிறது.
මූලික කරුණු සහ සාක්ෂි
- —TIN இலக்க கட்டாயமாக்கல் 2027 ஏப்ரல் வரை ஒத்திவைப்பு
- —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
- —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
මූල්ය ස්ථාවරත්වය, මහ බැංකු ප්රතිපත්ති, වෙළඳපල ද්රවශීලතාව සහ විනිමය අනුපාත කෙරෙහි තීරණාත්මක බලපෑමක් ඇත.
Hiru News (ஹிரு) කොළඹ පුවත් කාමරය සහ අදාළ බලධාරීන් මගින් ඉදිරි ක්රියාමාර්ග නිරීක්ෂණය කෙරේ.
පුවත්පත් ආවරණ විෂය පථය
Ground News Styleතහවුරු කර ඇති මාධ්ය ගණන: 2 ස්වාධීන පුවත්පත් කාමර across print, broadcast, and international agencies.
Hiru News (ஹிரு)
ප්රකාශකයාගේ නිල වෙබ් අඩවියෙන් සම්පූර්ණ පුවත් වාර්තාව කියවා සැබෑ මාධ්යවේදයට සහාය වන්න.
Cross-Publisher Reporting & Perspectives (1)
TIN இலக்க கட்டாயமாக்கல் 2027 ஏப்ரல் வரை ஒத்திவைப்பு
පාඨක අදහස් සහ සංවාදය
0නිරවුල්, ගෞරවනීය පාඨක අදහස් හා විග්රහයන්
ලංකා ඩිස්පැච් ආචාරධර්ම අනුව අපහාසාත්මක හෝ අසත්ය තොරතුරු ස්වයංක්රීයව පෙරහන් කෙරේ.
Reporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk